சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்இலங்கையில் காணப்படும் துடுப்பாட்ட அரங்கங்களில் ஒன்றாகும். இலங்கையில் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் இலங்கை துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையகமும் இதுவாகும். இலங்கையில் நடைபெறும் முக்கிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளையும், உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடத்துவதால் இவ்வரங்கம் இலங்கையின் லோட்ஸ் அரங்கம் எனப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு இலங்க்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற தேர்வுத்துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைபெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியாகும். இவ்வரங்கின் முதலாவது ஒருநாள் பான்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் மிடையில் நடைபெற்றது.





